செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் தனியார் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்த செல்ஃபோன் டவர் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கிராம மக்கள் வருவாய் துறையினர், காவல் துறையிடம் புகார் அளித்திருந்தனர்.
அதையும் மீறி செல்ஃபோன் டவர் அமைக்க பணி தொடங்கியதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: எரிவாயு உருளை விலை உயர்வு: பெண்கள் ஒப்பாரி போராட்டம்!