ETV Bharat / state

இன்சூரன்ஸ் பணத்தைப் பெற நண்பனைக் கொலை செய்து நாடகமாடியவர் கைது..! சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்..! - செங்கல்பட்டு குற்றம்

Insurance money: செங்கல்பட்டில் ஜிம் ஊழியர் ஒருவர் தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தன் நண்பனைக் கொலை செய்து விட்டு, தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் இறந்துவிட்டதாக நாடகம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 1:24 PM IST

Updated : Jan 3, 2024, 2:53 PM IST

செங்கல்பட்டு: அச்சரப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி குடிசை வீடு ஒன்று எரிந்து சாம்பலானது. இந்த வீட்டில் உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது தீ விபத்தா, கொலையா என ஒரத்தி பகுதி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இதனிடையே குறிப்பிட்ட தீ விபத்தில் இறந்தது தன்னுடைய தம்பி சுரேஷ் என்று கூறி ஒரத்தி காவல் நிலையத்தில் மரிய ஜெயஸ்ரீ என்ற பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் புகாரைப் பெற்றுக் கொண்ட ஒரத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் உயிரிழந்த நபரைச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து, அயனாவரம் பகுதியில் அடக்கமும் செய்துள்ளனர்.

மேலும் சுரேஷ் ஆயுள் காப்பீடு செய்திருந்த நிறுவனத்தை அணுகி சுமார் ஒரு கோடி மதிப்பிலான காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்கும் சிலர் முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இதனிடையே சென்னை, எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவர், தனது மகன் டில்லிபாபுவை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை என்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அங்கு வழக்கு விசாரணையில் முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அங்கும் உரிய பதில் கிடைக்காததால், லீலாவதி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் தலையிட்ட பிறகு போலீசார் லீலாவதியிடமும் அவருடைய மற்றொரு மகன் பழனி என்பவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தனது நண்பர்களுடன் வெளியூர் சென்று விட்டு வருவதாகக் கூறி டில்லி பாபு சென்றது தெரியவந்துள்ளது. அந்த போலீசார் விசாரணை அடிப்படையில் டில்லி பாபுவின் நண்பர்களான சுரேஷ், ஹரி கிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோரை வலை வீசித் தேடினர். பின்னர் டில்லி பாபுவின் நண்பர்களை திருவாலங்காடு பகுதியில் பிடித்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் சினிமாவை மிஞ்சும் விதமாக இருந்தது.

சென்னையில் தனியார் உடற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சுரேஷ், தனது பெயரில் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளார். தான் உயிரோடு இருக்கும் போதே அந்த பணத்தை செலவழித்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என முடிவு செய்து அதற்காகத் திட்டம் போட்டுள்ளார். இதற்காக தன்னைப் போன்ற உடலமைப்பு கொண்ட நபர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதில், சில வருடங்களுக்கு முன்பு தனக்கு பழக்கமான டில்லி பாபு என்பவர் நினைவுக்கு வர, அவர் தற்போது எர்ணாவூர் பகுதியில் வசிப்பது குறித்து தகவலறிந்து, அவரது வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்துடன் பழகி உள்ளார். அதன் பின்னர் சுரேஷும் அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோரும் டில்லிபாபுவை அழைத்துக் கொண்டு மேல்மருவத்தூர் பகுதிக்கு வந்துள்ளனர்.

அங்கு அனைவரும் மது அருந்திவிட்டு, அச்சரப்பாக்கம் ஒன்றியம் அல்லானூர் பகுதியில் கட்டி வைத்திருந்த குடிசை வீடு ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து டில்லி பாபுவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அதன்பின் பெட்ரோல் ஊற்றி அந்த குடிசை வீட்டோடு டில்லி பாபுவின் சடலத்தையும் சேர்த்து எரித்துள்ளனர்.

அதன் பிறகு தனது அக்காவை வைத்து, தான் தீ விபத்தில் எரிந்து இறந்து விட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் சுரேஷ் அளித்துள்ளார். பின்னர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் ஒட்டி அனைவரையும் நம்ப வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சுரேஷ் தான் காப்பீடு செய்திருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தைப் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக டில்லிபாபுவை கொன்று தானும் இறந்தது போல் நாடகமாடியது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் சுரேஷ், கீர்த்தி ராஜன், அரிகிருஷ்ணன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் உச்சகட்ட திருப்பமாக, தான் இறந்ததாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை நம்ப வைத்த சுரேஷ், தனது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு பல வகையிலும் முயன்றுள்ளார்.

ஆனால், போலீசார் சம்பவத்தை தற்கொலை என்று பதிவு செய்திருந்ததால், இன்சூரன்ஸ் பணம் கொடுக்கப்பட மாட்டாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் இறந்ததாக அனைவரையும் நம்ப வைத்து, நண்பனை எரித்துக் கொன்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இன்சூரன்ஸ் பணமும் கைக்குக் கிடைக்காமல் சிறைக்குச் சென்ற சுரேஷின் கதை, சினிமாவை மிஞ்சிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வாணியம்பாடி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; 2 பேர் கைது

Last Updated : Jan 3, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.