ETV Bharat / state

பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் கேட்டதால் தகராறு - இரண்டு பேருக்கு சிறை - சிறைத் தண்டனை

செங்கல்பட்டு மாவட்டம், பின்னம்பூண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதை தட்டிக்கேட்ட 2 பேரை, போலீசார் கைது செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More price for liquor bottle in chengalpattu - two people gets jail term
மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதை தட்டிக்கேட்ட 2 பேருக்கு சிறைத்தண்டனை!
author img

By

Published : May 23, 2023, 12:02 PM IST

Updated : May 23, 2023, 1:00 PM IST

செங்கல்பட்டு: டாஸ்மாக் மதுபானக் கடையில் பத்து ரூபாய் ஏன் கூடுதலாக வசூலிக்கிறீர்கள் என தட்டிக் கேட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலாக, ஒவ்வொரு குவார்ட்டர் மதுவுக்கும் பத்து ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம், நெடுநாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகளும், காணொலிகளும் உலா வந்து கொண்டுதான் உள்ளன‌. சமீபத்தில், ஏன் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கிறீர்கள் என மதுப் பிரியர் ஒருவர் கேட்டதற்கு, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது என விற்பனை ஊழியர் ஒருவர் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர்கள் கேட்டபோது, ’’அப்படி எதுவும் நடைபெறவில்லை. எந்தக் கடை, எந்த விற்பனையாளர் எனக் குறிப்பிட்டுக் கூறுங்கள் என அமைச்சர் அடியோடு மறுத்தார். அனைத்து கடைகளிலும் இதுதான் நிலைமை. நீங்கள் அமைச்சராக வராமல் என்னோடு இருசக்கர வாகனத்தில் வாருங்கள். நான் நிரூபிக்கிறேன் என ஒரு செய்தியாளர் சவால் விடுத்ததும் அதை அமைச்சர் காதிலேயே வாங்காமல் மீண்டும் மீண்டும் பொய்யான தகவல்’’ என மறுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், பின்னம்பூண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர், நேற்று(மே 22ஆம் தேதி) பீர் பாட்டில் ஒன்றும், பிராந்தி பாட்டில் ஒன்றும் என மொத்தம் இரண்டு பாட்டில்களை அந்தக் கடையில் வாங்கியுள்ளனர். விற்பனையாளர் சரவணன் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என கூடுதலாக 20 ரூபாய் வாங்கியுள்ளனர்.

இதற்கு காமராஜ் மற்றும் கண்ணன் இருவரும் விற்பனையாளரிடம், ’’ஏன் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக இரண்டு பாட்டிலுக்கு 20 ரூபாய் பணம் எடுத்துள்ளீர்கள்’’ எனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியதால் காமராஜ் மற்றும் கண்ணன் ஆகியோருக்கும் விற்பனையாளருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பிரச்னை முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. உடனடியாக அச்சிறுப்பாக்கம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுபட்டிருந்த கண்ணன் மற்றும் காமராஜ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே கடை மேலாளர் முருகன் என்பவர் காமராஜ், கண்ணன் இருவர் மீதும், கடையினுள் புகுந்து தாக்கியதாகவும், மது பாட்டில்களை அத்து மீறி எடுக்க முயன்றதாகவும் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கண்ணன் மற்றும் காமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கூடுதல் விலை குறித்து நியாயம் கேட்டவர்கள் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைத்த டாஸ்மாக் ஊழியர்களின் செயல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Last Updated : May 23, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.