ETV Bharat / state

அதிமுகவிற்கு ஆதரவளிப்பது ரஜினியின் விருப்பம்: அமைச்சர் பாண்டியராஜன்!

author img

By

Published : Dec 29, 2020, 7:41 PM IST

செங்கல்பட்டு: எம்ஜிஆர் ஆட்சியமைய பாடுபடுவேன் என்று ரஜினி கூறிவந்த நிலையில், எம்ஜிஆரின் வழியில் நடக்கும் அதிமுகவிற்கு ஆதரவளிப்பது, அவரது தனிப்பட்ட விருப்பம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மாஃபா பாண்டியராஜன்  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு  ரஜினி அதிமுகவிற்கு ஆதரவு  செங்கல்பட்டில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ரஜினி குறித்து பேச்சு  Minister Mafa Pandiyarajan  Support for Rajini AIADMK  Minister Mafa Pandiyarajan talks about Rajini in Chengalpattu  Minister Mafa Pandiyarajan press conference
Minister Mafa Pandiyarajan talks about Rajini in Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 29) நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்ற அமைச்சர் பாண்டியராஜன், 55 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்.

இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "இதேபோல், ஆறு ஊராட்சிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும். நெடுங்குன்றத்தில் உள்ள கால்நடை மருந்தகம் 15 லட்ச ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.

ரஜினி நலனில் அக்கறை

நடிகர் ரஜினி பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அதிமுகவினரின் வேண்டுதல். அவரது ரிசகர்கள், தமிழ் நெஞ்சங்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களும் ரஜினியின் உடல் நலனில் அக்கறை கொண்டுள்ளனர். தற்போது, கட்சி தொடங்க மாட்டேன் என அவர் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. எம்ஜிஆர் வழி நடக்கும், ஆட்சி அமைப்பேன் என ரஜினி கூறிவந்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ரஜினி ஆதரவு

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எம்ஜிஆர் வழியில்தான் ஆட்சி நடத்திக் கொண்டுள்ளனர். எனவே, அதிமுகவிற்கு ஆதரவளிப்பது என்பது ரஜினியின் தனிப்பட்ட விருப்பம்" என்றார். இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லுாயிஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.