ETV Bharat / state

செங்கல்பட்டு மாவட்டத்தின் 5ஆவது மினி கிளினிக்: தொடங்கி வைத்த அமைச்சர் - அமைச்சர் பாண்டியராஜன்

செங்கல்பட்டு மாவட்டத்தின் 5ஆவது மினி கிளினிக்கை திருக்கழுங்குன்றம் வழுதூர் ஊராட்சியில் அமைச்சர் பாண்டிய ராஜன் இன்று திறந்து வைத்தார்.

மினி கிளினிக் அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

author img

By

Published : Jan 18, 2021, 9:23 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வழூதூர் ஊராட்சியில் மினி கிளினிகை அமைச்சர் பாண்டியராஜன் இன்று திறந்து வைத்தார். இது மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐந்தாவது கிளினிக் ஆகும்.

அப்போது பேசிய அமைச்சர், இந்த கிளினிக் மூலம் மருத்துவமனையை எளிய முறையில் கிராமத்திற்கு கொண்டு சென்ற பெருமை முதலமைச்சரைசாரும். இந்த மாத இறுதிக்குள் இன்னும் 53 மினி கிளினிக் திறக்கப்படும் என தெரிவித்தார்.

அங்கே பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மேல் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது சுட்டிக்காட்டி உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து திமுக தலைவர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் அதிமுகவை குற்றம் சாட்டுவதை வேலையாக வைத்திருக்கிறார். அதிமுகவின் வெற்றியை யாராலும் பறிக்க முடியாது. திமுக தோல்வியைத் தழுவுவது உறுதியாக உள்ளது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

இவ்விழாவில் அதிமுக மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மற்றும் துணைச் செயலாளர் எஸ்வந்த்ராவ், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் வருவதும் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அடையார் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு - இழப்பீட்டுத் தொகை ரூ.11 லட்சம் வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.