செங்கல்பட்டு: தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான மாண்டஸ் புயலின் தீவிரம் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனிடையே பல கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் சீற்றத்துடன் கூடிய கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 120 மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக பூஞ்சேரியில் 40, மாமல்லபுரத்தில் 40 மற்றும் திருப்போரூரில் 40 பேரிடர் மீட்புப் படையினர் என்று மூன்று பிரிவுகளாக முகாமிட்டு, எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு புயல் இடர்பாடுகளை எதிர்கொள்வது மற்றும் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆலோசனை வழங்கினார்.
இதையும் படிங்க: கடும் சீற்றத்துடன் மாமல்லபுரம் கடற்கரை!