செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் தூத்துக்குடியிலிருந்து எண்ணூர் வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இப்பணி நேற்று (செப்.8) மதுராந்தகம் அருகே உள்ள எலப்பாக்கம், ராமாபுரம், மதூர், கோட்டை கயப்பாக்கம், ரெட்டிபாளையம், கிளியா நகர் வழியாகப் புதைக்கப்படுகிறது.
இப்பணியை விவசாயிகள் தடுத்துநிறுத்தி, குழாய் பதிக்கும் இடத்திற்காக அரசு நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையை ஐஓசி நிறுவனம் கொடுத்துவிட்டு பணியை செய்ய வேண்டும் என்றனர்.
பல இடங்களில் இப்பணி முடிவடைந்து இருந்தாலும் அப்பகுதி விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படவில்லை.
ஆகவே எங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஒரு ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் தொகையை முழுமையாகக் கொடுத்துவிட்டு குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு முன்பாக குழாய் புதைக்கக் கூடாது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.