செங்கல்பட்டு: 30 வருடங்களாக கணவன் இறந்துவிட்டதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றி பழகி வீட்டை அபகரிக்க முயன்றதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது பாதிக்கப்பட்டவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (அக்.22) புகார் அளித்துள்ளார்.
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை(50), இவர் கட்டிட ஒப்பந்த மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 32 வருடங்களுக்கு முன்பு இவரிடம் வேலைக்கு வந்த வள்ளி நான் கணவன் இறந்து தனது மகன் ரஞ்சித்குமாருடன் மிகவும் கஷ்டபடுவதாக கூறியுள்ளார்.
இதனால், ஏழுமலை அவருக்கு வேலை தந்து அவரது வீட்டு மனையில் 3 சென்ட் இடத்தை ஒதுக்கி கொடுத்து 20,00,000 ரூபாய் செலவு செய்து வீடு கட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது மகன் ரஞ்சித்குமாரையும் செலவு செய்து படிக்க வைத்து. தற்போது அவர் மலேசியாவில் நல்ல வேளை பார்த்து வருகிறார். இந்நிலையில் வள்ளி என்பவர் தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக தாம்பரம் காவல் ஆணைய அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 'வள்ளி என்பவர் அவரது கணவர் உயிருடன் இருக்கும் போதே எனது பெயரை கணவராக சேர்த்து என்னை ஏமாற்றியுள்ளார். இறந்த போனதாக சொன்ன சின்னையா திடீரென கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரோடு வந்தார்ர். அப்போதுதான் எனக்கு எல்லாம் தெரிந்தது. வள்ளியின் மகன் ரஞ்சித்குமார் என்னை கொலை செய்து விடும்படி தனது தாய் தந்தைக்கு செல்போனில் சொன்னதன் அடிப்படையில், கடந்த செம்படம்பர் 30ஆம் தேதி அன்று காலை எனக்கு சம்பவ இடத்தில் உள்ள வீட்டில் வைத்து உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சித்தனர்.
இதனை தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றேன். அப்போது வள்ளியும் அவரது கணவர் சின்னையாவும் எண் கண்ணில் மிளகாய் பொடி தூவி கீழே தள்ளி தாக்கினர்.பயந்து போய் உடனடியாக நான் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்.
என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்கி, கொலை முயற்சி செய்து என்னை ஏமாற்றிய வள்ளி அவரது கணவர் சின்னையா மற்றும் அவரது மகன் ரஞ்சித்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், தன்னிடம் ஏமாற்றி தனது கணவர் இறந்ததாக பொய்ச்சொல்லி என்னிடம் உள்ள ரூ.30,00,000 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் சொத்துக்களை மீட்டுத்தரக் கோரி' அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் பேசிய ஏழுமலை, 'எனக்கு விஷம் கலந்த உணவை சாப்பிட அளித்தபோது, அதை அறிந்து நான் தப்பித்துவிட்டேன். 3 நாட்களுக்கு வீட்டிற்க்குள்ளேயே என்னை அடைத்து வைத்து இருந்த நிலையில், வள்ளியின் சகோதரி மலர் என்பவர் என் கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி கொலை செய்ய முயன்றபோதும் தப்பித்து ஒரு மாதம் தலைமறைவாகினேன்.
இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள நிலையில், தனது 3 சென்ட் நிலத்தையும், தனது பணத்தையும் மீட்டுத் தரக் கோரிக்கை விடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டாக்கத்தியை காட்டி செல்போன், பணம் கொள்ளை; சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இருவர் கைது!