ETV Bharat / state

6-வது மாடியில் இருந்து குதித்த மாணவன்.. செமஸ்டர் தேர்வால் அப்செட்? - செமஸ்டர் எழுதிய மாணவர் தற்கொலை

சென்னையில் தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவன் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 27, 2022, 6:25 PM IST

செங்கல்பட்டு: மேலகோட்டையூரில் உள்ள விஐடி(VIT) கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிடெக் படித்து வருபவர் புட்டாலா ஓம்கிரிஸ் (19). பூனேவைச் சேர்ந்த இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று (நவ.26) மாலை செமஸ்டர் தேர்வு இருந்த நிலையில் 9.30 மணிக்கு தேர்வு அறைக்குச் சென்றுவிட்டு 11 மணிக்கு வெளியில் வந்தவர், 6-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் அவருக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலது பக்க விலா எலும்புகள் முறிந்தது. கல்லூரியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கு அதிக அரியர் இருப்பதாகவும், முந்தைய தேர்வுகளை சரியாக எழுதாததால் விரக்தியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அரியர் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காவலர்கள் தேர்வில் இவ்வளவு பேர் ஆப்சென்ட்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.