ETV Bharat / state

மின்கம்பம் விழுந்து சிறுமி உயிரிழப்பு.. ஊர் மக்கள் போராட்டம்.. - செங்கல்பட்டு பள்ளி மாணவி உயிரிழப்பு

வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின்மீது, மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 15, 2022, 2:56 PM IST

செங்கல்பட்டு: வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின்மீது, மின் கம்பம் விழுந்ததில் சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்களும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் ஆறாம் வகுப்பு படித்து வந்த கிருத்திகா. காலாண்டு தேர்வு விடுமுறையொட்டி, அரிவமேடு பகுதியிலுள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சிறுமி சென்றிருந்தார். அங்கு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுமியின்மீது திடீரென எதிர்பாராத விதமாக தெருவில் இருந்த மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. இக்கோரமான சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (அக்.15) பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் கம்பம் விழுந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு.. மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மதுராந்தகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ஓசூரில் விஷவாயு தாக்கி 150 மாணவர்கள் திடீர் மயக்கம்... தொழிற்சாலை விஷவாயு காரணமா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.