ETV Bharat / state

DMK-வை கடுமையாக தாக்கிய அண்ணாமலை! - Udhayanidhi stalin

Annamalai critically expansion of DMK: சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 7:29 PM IST

Updated : Sep 7, 2023, 7:52 PM IST

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய் சனாதனம். அதை அழிக்க வேண்டும்" என கூறி இருந்தார். இதற்கு பல்வேறு எதிர் தரப்பினர் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

  • If something needs eradication from Tamil Nadu, it is the DMK.

    D - Dengue
    M - Malaria
    K - Kosu

    Going forward, we are sure that people will associate these deadly diseases with DMK.

    Here is my detailed rebuttal to TN CM Thiru @mkstalin avl’s press statement today. pic.twitter.com/sg6Pmp1nTv

    — K.Annamalai (@annamalai_k) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த வகையில், இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'X’ வலைதளப் பதிவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மறுப்பு என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பேசிய அண்ணாமலை, "ஸ்டாலினுக்கு வணக்கம். உங்கள் அறிக்கையையும், உங்கள் மகனின் அறிக்கையையும் பார்த்தோம். கடந்த 4 நாட்களாக நீங்கள் தோற்கும் சண்டையை போடுகிறீர்கள். இன்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து பொய்களை பரப்புகிறீர்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஏதாவது ஒன்றை ஒழிக்க வேண்டும் என்றால், அது திமுகதான். D - Dengue, M - Malaria, K - Kosu. இனி வரும் காலங்கள் மக்கள் இந்த கொடிய நோய்களுடன் திமுகவை தொடர்புபடுத்துவார்கள் என்று நம்புவோம்" என்று பேசி இருக்கிறார். இதற்கு முன்னதாக அண்ணாமலை, "சனாதன தர்மத்திற்கு உதாரணம், 'அய்யா வைகுண்டர்' . 'முதலும் முடிவும் இல்லாத தர்மம்தான் சனாதன தர்மம்'. சனாதன தர்மத்தில் மட்டும்தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும் என்று சொல்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்கள், ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியதாக அண்ணாமலை தனது ‘X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அதேநேரம், அமைச்சர் உதயநிதி மீது பல்வேறு தரப்பினர் வழக்குகள் பதிவு செய்து உள்ள நிலையில், அந்த பொய் வழக்குகளை தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "சனாதனம் என்பது தொழுநோய், எச்.ஐ.வி போன்றது" - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு!

Last Updated : Sep 7, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.