செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்துள்ளது மாரிபுத்தூர் கிராமம். இங்கு அப்துல் சமது என்பவருக்குச் சொந்தமான அன்சர் கோழிப் பண்ணை உள்ளது. இவருக்குச் சொந்தமாக மதுராந்தகத்தில், அன்சர் ஸ்டோர் என்ற வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது.
இந்த நிலையில் அப்துல் சமது, தனது கோழிப்பண்ணையில் கோழிகளுக்குத் தீவனமாக ரேஷன் அரிசியை சட்டவிரோதமாகக் கடத்திப் பயன்படுத்தி வருவதாக குடிமைப்பொருள் அலுவலர்களுக்கு இன்று (செப்.12) ரகசிய தகவல் கிடைத்தது.
115 மூட்டைகள் பறிமுதல்
இதனையடுத்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் அலுவலர்கள் கோழிப்பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 115 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக ஐயப்பன் என்ற கோழிப்பண்ணை ஊழியரைக் கைது செய்து தலைமறைவாக உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் அப்துல் சமதுவையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மன் கோயிலில் ஆன்லைன் துப்பாக்கி!