உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஐந்து மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்புவதாக செய்தி வெளியானது. ஆனால், அந்தப்பட்டியலில் தமிழ் இல்லை. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமாதாஸ், அமமுக பொதுச்செயலளார் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், பாமக நிறுவனர் ராமதாஸ், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது, அதேநேரத்தில் அந்தப் பட்டியலில் தமிழ் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றும், வேண்டும் என்றால் தமிழிலும் தீர்ப்புகள் வெளியிடுவற்கான உதவிகளை தமிழ்நாடு அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம் பெறாதது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அலுவல் ரீதியாக பயன்படுவதற்கான கட்டமைப்புகளும் தமிழ் மொழிக்கு உண்டு. எனவே அதற்குறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 3, 2019உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 3, 2019