ETV Bharat / state

'அண்ணா பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடா..?' - கே.பி.அன்பழகன் மறுப்பு

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

KPA
author img

By

Published : Jun 3, 2019, 10:52 PM IST

பி.இ., பி.டெக்.பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம்சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்க ஆணையர் விவேகானந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு முறைக்கேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது யார் எந்த தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. அடுத்தக்கட்டமாக தவறுகளை எல்லாம் முழுமையாக ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த குற்றச்சாட்டுகள் குறித்து எந்த ஒரு நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என யாரும் அரசின் சார்பில் கூறவில்லை.

அரசியல் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் தான் பேட்டியளித்து, பின் அவரே அரசியல் அழுத்தம் இல்லை என்று கூறிவிட்டார். எனவே யார் மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரே விளக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு நிச்சயமாக கிடையாது. அரசின் கொள்கை முடிவினை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அரசின் கடைமையாகும்.

தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்க வேண்டும் என வலியுறுத்துவது குறித்து அரசின் கவனத்திற்கு எதுவும் வரவில்லை. அப்படி செய்தால் அது தவறு. அப்படி புகார் தெரிவித்தால் அந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க தயார். பல்கலைகழகத்தை பொறுத்தவரை ஆளுநர் வேந்தர், உயர்கல்வித்துறை அமைச்சர் இணை வேந்தர், அவர் துணைவேந்தர். எனவே சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் செய்ய முடியுமே தவிர, யாரும் சர்வதிகாரமாக எதுவும் செய்ய முடியாது. அதனால் அவரின் செயல்பாடுகளில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதற்கு இணை வேந்தராகவும், அரசாகவும் நாங்கள் இருக்கிறோம்.

அண்ணாப் பல்கலைக் கழகம் ஒரு செமஸ்டருக்கு ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது. ஆண்டிற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இது தனியார் பொறியியல் கல்லூரிக்கான கட்டணத்தைப் போல் இருக்கிறது. கட்டணம் நிர்ணயம் தொடர்பாக நீதிபதி கமிஷன் அமைத்திருக்கின்றோம். அதனால் அண்ணா பல்கலை உள்ளிட்ட எந்த கல்லூரிகளாக இருந்தாலும், கட்டண உயர்வு குறித்து, அவர்களது நீதிபதியிடமே முறையிட்டு அதற்கான தீர்வு காண முடியும், என்றார்.

அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி

தொடர்ந்து, உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீடு மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களை பணி நீக்கம் செய்வதற்கு ஆட்சிமன்ற குழுவுக்கு உத்தரவிட்டுள்ளோம். உயர்கல்வித்துறை செயலாளராக பதவியேற்று பணிபுரியும் இந்த 9 மாதத்தில் எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப் போன்ற எதுவும் எனது மூலமாக துணைவேந்தர் தரப்புக்குப் போகவில்லை. அனைத்து தகவல்களும் கடிதம் மூலமாக மட்டுமே செல்கிறது. அமைச்சர், அரசின் செயலாளர், அரசிடம் இருந்தும் எந்த தகவலும் செல்லவில்லை, என்றார்.

Intro:Body:

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் பேசியதாவது, அண்ணா பல்.கலை முறைகேடில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பல்கலைகழகத்திற்கு அரசு சார்பில் எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை. அரசின் கொள்கை முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் செயல்லபடுத்த வேண்டும். மாணவர்கள் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழகக் கல்வி கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்படவில்லை. பல்கழைக்கழக துணை வேந்தருக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலமாகவே முறையற்ற கோரிக்கைகளை அரசு முன்வைப்பதில்லை. முறைப்படி கடிதம் மூலமே அனைத்து நடவடிகைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.