ETV Bharat / state

8 தொகுதிகளில் உதயசூரியனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இரட்டை இலை! - politics

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன.

admk
author img

By

Published : Mar 17, 2019, 12:53 PM IST

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளும், புதுவையில் 1 தொகுதியும் என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் இருகின்றன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள், பாமகவிற்கு 7, தேமுதிகவுக்கு 4, இதர கட்சிகளுக்கு 4 என 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, எஞ்சிய 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள், இரண்டு இடதுசாரிகளுக்கும் தலா 2, மதிமுக 1, விசிக 2, இதர கட்சிகளுக்கு 3 என 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இருவரும் ஒருவருக்கொருவர் காத்திருந்து, காத்திருந்து இறுதியாக வேறு வழியின்றி திமுக தன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை முதலில் அறிவித்தது. அதன்பின், தற்போது அதிமுகவும் தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி, தென் சென்னை, காஞ்சிபுரம்(தனி), சேலம், திருவண்ணாமலை, நீலகிரி(தனி), பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதிக்கொள்கின்றன.

குறிப்பாக முதலமைச்சர் மாவட்டமான சேலத்தை திமுக காங்கிரஸுக்கு ஒதுக்கும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்டாலின் அதை செய்யாமல் எம்.ஜி.ஆர். பாணி தொகுதி ஒதுக்கீட்டு ஸ்டைலை கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், எம்.ஜி.ஆர். தேர்தல் வியூகங்களின் படி வலுவானத் தொகுதியை தன் வசம் வைத்துக்கொண்டு, எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது எம்.ஜி.ஆரின் தேர்தல் ஃபார்முலாவாகும். அதை ஸ்டாலின் கையில் எடுத்துவிட்டதால் எடப்பாடியும் மோதிப் பார்த்துவிடுவோம் என்றே முடிவெடுத்திருக்கக் கூடும்.

அதேபோல், நீலகிரி தனி தொகுதியில் திமுகவின் சார்பில் ஆ.ராசா களமிறக்கப்படுவார் என்றே அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆ.ராசா இதற்கு முன்னரே அந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்பதால், அங்கு அதிமுகவிற்கு கடும் நெருக்கடி நிலவும் என்றே கூறப்படுகிறது.

பொள்ளாச்சி தொகுதியிலும் அதிமுகவிற்கு தற்போது நிலைமை சரியில்லாததால், அதிலும் அதிமுக ரிஸ்க் எடுத்திருப்பதாகவே கூறப்படுகிறது. எனில், செல்வாக்கு பொருந்திய வேட்பாளரை அதிமுக களமிறக்கினால் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

எஞ்சிய தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகள் என திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதிக்கொள்ள இருக்கும் 8 தொகுதிகளில் உதயசூரியன் எத்தனை தொகுதிகளில் உதிக்கும் என்றும், இரட்டை இலை எத்தனை தொகுதிகளில் துளிர்க்கும் என்பதும் இரு கட்சிகளும் செய்ய இருக்கும் களப்பணியை பொருத்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Intro:Body:

Body

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.