சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்ற வேண்டும் என தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் மோடி பரப்புரைக்கூட்டத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இதனை வலியுறுத்தியிருந்தார். தற்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.