கருணை என்பது அனைவரிடமும் எவ்வித பாகுபாடின்றி அன்பு செலுத்துவது. மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்கும் கருணையை போற்றும் விதமாக உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் 1998-ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி, கருணை இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரும் சக மனிதனை சமமாகவும் கருணையோடும் அணுகவேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
பொருளாதாரம் மற்றும் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுபவர்கள் மூலமாக நாம் கடவுளை காணலாம். அதற்கு கருணை கொண்ட மனம் தேவை. இந்த மனம் அனைவருக்கும் கட்டாயம் வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கருணை என்பது, ஒரு எண்ணம், உணர்வு, நம்பிக்கை. அதனால் பிறருக்கும் நமக்கும் நன்மை கிடைக்கிறது. ஆனால் கருணையில்லாமல் நடந்துகொள்வது என்பது, பிறரின் நலன் குறித்து யோசிக்காமல் இருப்பது. ஒரு நம்பிக்கையற்ற தன்மை அது.
கருணைக்கு இன்னொரு பெயர் உள்ளது. அதாவது அன்னை தெரசா. மனிதம், கனிவு ஆகிய உயர்ந்த அழகிய பண்புகளே ஒருவரை உயர்த்தும் என்பதற்குச் சான்று இவர். பிறர் பசியாறுவதை கண்டு இன்பம் கண்ட அவரின் புகழ் மனிதன் வாழும் மட்டும் மறையாது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் புனிதராகிறார் தேவசகாயம் - அடுத்த ஆண்டு மே மாதம் வாடிகனில் விழா