அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு பாலன். இவர் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்தார். கரோனா தொற்று காரணமாக சொந்த ஊரான முத்துவாஞ்சேரிக்கு வந்த அவர் வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டுவந்தார்.
இந்நிலையில் மின் மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்காததால் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.