ETV Bharat / state

மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் காரை முற்றுகையிட்ட தமாகாவினர்!

அரியலூர்: ஜி.கே மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுகவினர் பரப்புரை நிகழ்ச்சி நடத்தியதாக கூறி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி கொடியுடன் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Dec 24, 2020, 8:22 PM IST

அரியலூர்
அரியலூர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜி.கே. மூப்பனார் அரங்கத்தின் பெயரை அழித்துவிட்டு திமுக பரப்புரை செய்ததாக புகார் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள், அக்கட்சி கொடியுடன் உதயநிதியின் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த தமாகாவினர்

காடரதித்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்துக் கொண்டு திருமானூர் சென்றபோது உதயநிதியின் காரை த.மா.கவினர் மறித்தனர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சி! - உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.