அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கிவைத்தார்.
பேரணியில் அடிக்கடி கை கழுவ வேண்டும், தொடர் இருமல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என விழிப்புணர்வுப் பதாகைகளை எடுத்துச் சென்றனர். இந்தப் பேரணி அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இப்பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி : கொரோனா பாதிப்பால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு ?