இன்ஸ்டாகிராமில் மாதாந்திர சந்தா முறை கூடிய விரைவில் வரும் என அந்நிறுவனத்தின் தலைவர் கூறியிருந்தார். தற்போது இது நடைமுறைக்கு வர உள்ளது.
மாதம் 89 ரூபாய் செலுத்தி படைப்பாளிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் பார்க்க முடியும். இன்ஸ்டாகிராமில் பயனரின் பெயர் பக்கத்தில் இந்த புதிய சந்தா முறைக்கான விருப்ப மெனு இருக்கும் என்று கூறப்படுகிறது.
சந்தா கட்டியுள்ள பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அதிலிருந்து விலகிக் கொள்ளும் வசதியையும் இன்ஸ்டாகிராம் செய்ய உள்ளது. மற்ற சமூக வலைதளங்களை போலவே தற்போது இன்ஸ்டாகிராமும் சந்தா முறையை கொண்டுவர உள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராம் இன்பிலியன்சர்ஸ் என்று சொல்லக்கூடிய செலிபிரிட்டி ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டை தங்களது பக்கத்தில் பதிவிடுவதற்கு குறிப்பிட்ட தொகையை பெறுகின்றனர்.
அது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இனி இவர்கள் பதிவேற்றும் வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இன்ஸ்டாகிராம் நிறுவனமே அவர்களுக்கு பணம் கொடுக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏழு ஆண்டுகளில் வங்கித்துறையில் வரலாறு காணாத சீர்திருத்தம் - பிரதமர் மோடி பெருமிதம்