அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயிகள் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்படுவது வழக்கம். தற்போது பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மக்காச்சோள விதை விதைப்பை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டு கிலோ மக்காசோளம் தேவைப்படுகிறது. மக்காச்சோளத் விதைப்பில் ஈடுபடும் அவர்களுக்கு ஏக்கருக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது.
மக்காச்சோளத்தில் படைபுளு தாக்குதல் இல்லாமல் இருந்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.