அரியலூர்: இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில், 18 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன.
காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம், அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது.
- ஊதியம் - ரூ.7,500
- கல்வித் தகுதி - ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- முன்னுரிமை - இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், பட்டியலின தகுதியாளர்கள் மற்றும் காலியிடங்கள் உள்ள இடங்களில் உள்ளவர்கள்
- ஒப்பந்த காலம் - நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2023 வரை
- விண்ணப்பிக்க கடைசி நாள் - 18.01.2023 மாலை 5.45 மணி
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை, உரிய கல்வித் தகுதி ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண் 35இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையா? - ராமதாஸ் வலியுறுத்தல்