அரியலூர் மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்த கணவன் மனைவி ஆகிய இரு நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை நமங்குணம் கிராமத்திற்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து கணவன் மனைவி ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
இவர்களுக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, இதில், அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. இதில் 360 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.