ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - விவசாயிகள் கோரிக்கை.! - விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Ariyalur Farmers grievance meeting அரியலூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் Farmers Grievance Meeting
Farmers Grievance Meeting
author img

By

Published : Jan 24, 2020, 6:56 PM IST

அரியலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது, அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, காவிரி உபரி நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை தற்போது விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனர். அதற்கு கொள்முதல் நிலையங்கள் அமைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதற்கு வேளாண்மை அலுவலர்கள் மனு கொடுங்கள் என கூறினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இதனை கேட்ட விவசாயிகள் ஆத்திரமடைந்து நெல் அறுவடை காலங்களில் கொள்முதல் நிலையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்ட இடங்களில் அலுவலர்கள் திறப்பது அவர்கள் வேலை அதனைவிட்டு விட்டு மனு கொடுங்கள் என்பது ஏற்புடையது அல்ல. இது தனியார் வியாபாரிகளுக்கு சாதகமாக அமையும் என அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் நாளையே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரத்னா தெரிவித்தார்.

இதையும் படிங்க:

குடிக்க பணம் கேட்ட மகன் - அடித்துக் கொன்ற தாய்!

Intro:அரியலூர் - ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைBody:அரியலூர் மாவட்ட கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்று வருகின்றது

அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது. அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் அனைத்து விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனுக்களை வழங்கினர். காவிரி உபரி நீா்பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை தற்போது விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனா். அதற்க்கு கொள்முதல் நிலையங்கள் அமைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினா். இதற்க்கு பதில் கூறிய வேளாண்மை அதிகாரிகள் மனு கொடுங்கள் என கூறினார். இதனை கேட்ட விவசாயிகள் ஆத்திரமடைந்து நெல் அறுவடை காலங்களில் ஏற்கனவே திறக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகள் திறப்பது அவா்கள் வேலை அதனைவிட்டு விட்டு மனு கொடுங்கள் என்பது ஏற்புடையது அல்ல இது தனியார் வியாபாரிகளுக்கு சாதகமாக அமையும் என அவா்கள் குற்றம் சாட்டினாா். இதனையடுத்து விவசாயிகள் கோரிகையை ஏற்று நாளையே திறக்கப்படும் என ஆட்சியா் ரத்னா தெரிவித்தார்.

Conclusion:கூட்டத்தில் விவசாயி தங்க சண்முக சுந்தரம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆல்வா கொடுப்பதாக கூறி அதனை கண்டிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.