ETV Bharat / sports

பாரா ஒலிம்பிக்: சோனல்பென் மதுபாய் படேல் தோல்வி - சோனல்பென் மதுபாய் படேல்

பாரா ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 25) பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல் தோல்வியடைந்தார்.

Tokyo Paralympics
Tokyo Paralympics
author img

By

Published : Aug 25, 2021, 11:57 AM IST

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 24) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இந்தப் போட்டிகளில், இரண்டாவது நாளான இன்று பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில், சீனாவின் கியான் லி-க்கு எதிராக இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல் களமிறங்கினார்.

போட்டியின் ஆரம்பம் முதலே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கியான் லி (9-11, 11-3, 15-17, 11-7, 11-4) ஐந்து செட் கணக்கில் வெற்றிபெற்றார். அதன்படி, மொத்தமாக 3-2 என்ற கணக்கில் சோனல்பென் மதுபாய் படேல் தோல்வியடைந்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இவர், 17-15 என்ற கணக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மதியம் மற்றொரு இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாவினா ஹஸ்முக்பாய் படேல் சி- 4 போட்டியில் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக் 2020: மாரியப்பன் கலந்துகொள்வதில் சிக்கலா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.