ETV Bharat / sports

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம்: சீமா பிஸ்லா தோல்வி

author img

By

Published : Aug 6, 2021, 8:41 AM IST

ஒலிம்பிக்கின் 15ஆவது நாளான இன்று (ஆக. 6) மகளிர் மல்யுத்த 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்தார்.

Seema Bisla
Seema Bisla

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 15ஆவது நாளான இன்று (ஆக. 6) இந்திய வீரர், வீராங்கனைகள் ஆடவர் 50 கிமீ நடை பந்தயப்போட்டி, மகளிர் 20 கிமீ நடை பந்தயப்போட்டி, கோல்ஃப், மகளிர் ஹாக்கி, ஆடவர், மகளிர் மல்யுத்தம் உள்ளிட்டப் போட்டிகளில் பங்கேற்றுவருகின்றனர்.

அதில், மகளிர் மல்யுத்த 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா, துனிசியா நாட்டின் சார்ரா ஹம்டிக்கு எதிராக ப்ரீ-ஸ்டைல் ரவுண்டில் களமிறங்கினார். ஆரம்பம் முதலே சார்ரா முன்னிலை பெற்றதால், சீமா பிஸ்லாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. இறுதியில் 1-3 என்ற கணக்கில் சீமா பிஸ்லா தோல்வியடைந்தார்.

மறுபுறம், ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பங்ரஜ் புனியா கிர்கிஸ்தான் நாட்டின் அக்மதாலீவ் உடன் மோதிவருகிறார். அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள் அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.