ETV Bharat / sports

நிறைவேறிய நூற்றாண்டு கனவு; தங்கம் வென்றார் நீரஜ் - INDIA WON GOLD MEDAL IN ATHELETICS

ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 87.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதுவே, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா தடகளத்தில் பெற்றுள்ள முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

Neeraj Chopra, நீரஜ் சோப்ரா
Neeraj Chopra
author img

By

Published : Aug 7, 2021, 5:39 PM IST

Updated : Aug 7, 2021, 6:43 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று (ஆக.7) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர். முதலில் கொடுக்கப்படும் மூன்று வாய்ப்புகளில் முதல் எட்டு இடங்களைப் பிடிப்பவர்ளுக்கு அடுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

இதில், நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரத்திற்கு வீசி முன்னிலை பெற்றார். அவர் வீசிய தூரத்தை மற்ற வீரர்கள் எட்டமுடியவில்லை. இதன்மூலம், நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றார்.

121 ஆண்டுகளுக்கு பின்...

முன்னதாக 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்தியா சார்பாக விளையாடிய நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்திலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி வென்றிருந்தார். 121 ஆண்டுகளுக்கு பிறகு, நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா

முதல் வாய்ப்பு - 87.03 மீட்டர்

இரண்டாம் வாய்ப்பு - 87.58 மீட்டர்

மூன்றாம் வாய்ப்பு - 76.79 மீட்டர்

நான்காம் வாய்ப்பு - ஃபவுல்

ஐந்தாம் வாய்ப்பு - ஃபவுல்

ஆறாம் வாய்ப்பு - 84.24 மீட்டர்

இதையும் படிங்க: TOKYO OLYMPICS: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா!

Last Updated : Aug 7, 2021, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.