ETV Bharat / sports

Tokyo Olympics: தமிழச்சி பவானி தேவி வெற்றி - வாள்வீச்சு

டோக்கியோ ஒலிம்பிக்கின் 4ஆவது நாளான இன்று வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி முதல் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தனதாக்கினார்.

Bhavani Devi
Bhavani Devi
author img

By

Published : Jul 26, 2021, 6:37 AM IST

Updated : Jul 26, 2021, 6:44 AM IST

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கின் 4ஆவது நாளான இன்று நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் பவானி தேவியை, துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஸிஸி (Nadia Ben Azizi) எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பவானி தேவி, எதிரணி வீராங்கனை நடியா பென்னை துவம்சம் செய்தார். மொத்தம் 6 நிமிடங்களே நடந்த இப்போட்டியில் பவானி தேவி 15-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை தனதாக்கினார்.

27 வயதான பவானி தேவி தமிழ்நாட்டில் பிறந்தவர். ஒலிம்பிக்கில் இவர் தனது ஆரம்ப போட்டியிலேயே வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை

Last Updated : Jul 26, 2021, 6:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.