மகளிருக்கான புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் எட்டாம் இடத்திலிருக்கும் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை எதிர்த்து ரஷ்யாவின் வெரோனிகா ஆடினார்.
இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய கிகி பெர்டன்ஸ் ஆட்டத்திற்கு பதிலளிக்க முடியாமல் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா திணறினார். இதனால் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடந்த இரண்டாவது செட் ஆட்டத்திலும் கிகியின் அதிரடி தொடர, அதனை 6-2 எனக் கைப்பற்றி, புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபியின் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இன்று இரவு நடக்கவுள்ள காலிறுதி போட்டியில் கிகி பெர்டன்ஸை எதிர்த்து ரஷ்ய வீராங்கனை அனஸ்தேஷியா ஆடயிருக்கிறார்.
இதையும் படிங்க: புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய பெலிண்டா பென்சிக்