ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும். இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுக்கான போட்டியில் உலகின் முதல்நிலை வீரரும் ஸ்பெயினின் நட்சத்திர வீரருமான ரஃபேல் நடால், சக நாட்டைச் சேர்ந்த பாப்லே புஸ்டாவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் புஸ்டாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டி ஒரு மணிநேரம் 38 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 33 வயதான நடால் ஒரு ஆஸ்திரேலிய ஓபன் தொடர் உட்பட இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றுள்ளார்.
இறுதியாக 2009இல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்ற அவர் 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா ஓபனில் சதமடித்து அசத்திய ஃபெடரர்!