ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று(பிப்.20) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை எதிர்கொண்டார்.
பரபாரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய ஒசாக முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
அதேசமயம் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நவோமி ஒசாகா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாகாவிற்கு சாம்பியன் கோப்பையும் 15 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஜெனிஃபர் பிராடிக்கு 8 கோடியே 56 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்!