டபிள்யூ.டி.ஏ. வுமன்ஸ் எலைட் தொடர் என அழைக்கப்படும் மகளிருக்கான ஹுஹாய் ஓபன் (zhuhai open) டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் நட்சத்திர வீராங்கனை கிகி பெர்டன்ஸை எதிர்த்து சீன வீராங்கனை ஷெங் ஆடினார்.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சீன வீராங்கனை ஷெங் அதிரடியாக ஆடி முதல் செட்டைக் கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டத்தில் சீன வீராங்கனையின் அதிரடிக்கு கிகி முற்றுப்புள்ளி வைத்தார். இரண்டாவது செட்டை 6-3 என கிகி கைப்பற்ற, மூன்றாவது செட் ஆட்டம் பரபரப்பானது. மூன்றாவது செட் ஆட்டத்தில் கிகி 4-1 என முன்னணி வகிக்க, ஷெங் தோல்வியை தவிர்க்க போராடினார்.
-
What a volley! @kikibertens@WTAEliteTrophy pic.twitter.com/0hErqKdkkj
— WTA (@WTA) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a volley! @kikibertens@WTAEliteTrophy pic.twitter.com/0hErqKdkkj
— WTA (@WTA) October 26, 2019What a volley! @kikibertens@WTAEliteTrophy pic.twitter.com/0hErqKdkkj
— WTA (@WTA) October 26, 2019
இறுதியாக மூன்றாவது செட் ஆட்டத்தில் 6-4 எனக் கைப்பற்றி ஹுஹாய் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐந்தாவது முறையாக கிகி முன்னேறினார். இறுதிப் போட்டியில் டச் வீராங்கனை கிகி பெர்டன்ஸ், பெலாரஸ் வீராங்கனை சபலெங்காவை எதிர்த்து ஆடவுள்ளார்.
இதையும் படிங்க: 'நான் பாட்டுக்கத் தானடா இருந்தேன்' - கேமராமேன் வாயில் பந்தை அடித்த டென்னிஸ் வீரர்!