உலகின் டாப் 8 வீரர்கள் போட்டியிடும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரியாவின் டோமினிக் தீமை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் முதல் செட்டை டோமினிக் தீம் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மெத்வதேவ் 7-6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி, தீமிற்கு அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டிற்கான ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட மெத்வதேவ் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் டோமினிக் தீமை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டோமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் 2020-21: அங்குலா அதிரடியால் தோல்வியிலிருந்து மீண்ட கோவா!