ETV Bharat / sports

Neeraj Chopra: "தங்கம் வென்றது நாட்டிற்கு பெருமையான தருணம்" - நீரஜின் தந்தை சொல்கிறார்!

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலின் இறுதி போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தந்தை சதீஷ் குமார் நெகிழ்ச்சி பேட்டி அளித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா
Neeraj Chopra
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 11:28 AM IST

பானிபட்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ஆம் தேதி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் தொடங்கி நடைபெற்றது. இதன் ஈட்டி எறிதலின் இறுதி போட்டி நேற்று (ஆகஸ்ட் 27) இரவு நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்திய நிலையில், 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

ஈட்டி எறிதலின் இறுதி போட்டியில் விளையாடிய நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் ஃபவுல் செய்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் தனது அசாதாரன திறமையை வெளிப்படுத்தி 88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார். இந்த சிறப்பான செயல் அவருக்கு உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று தந்தது.

இதையும் படிங்க: 4×400 Metres Relay: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இந்திய அணி.. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!

25 வயதான நீரஜ் சோப்ரா, ஹரியானா மாநிலம் பானிபட்டில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே ஈட்டி எறிதலில் ஆர்வம் கொண்ட நீரஜ், தற்போது இந்திய நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இவரது வெற்றியை அவரது குடும்பத்தினரும், ஊர் பொது மக்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவருக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் முதல் முக்கிய பிரமூகர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து வரலாற்று நாயகனான நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ் குமார் கூறுகையில், "உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றது நமது நாட்டிற்கு மிகவும் பெருமையான தருணம். அவர் இந்தியா திரும்பியதும் இதனை விமர்சையாக கொண்டாடி மகிழ்வோம்" என்றார்.

தொடர்ந்து தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "இந்திய தடகளத்தின் தங்க மகன் உலக சாம்பியன்ஷிப்பின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார். உங்களின் சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. இந்தத் தருணம் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூறும்" இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

  • 💪💪💪@Neeraj_chopra1 does it again! 🇮🇳

    88.17 Meters for 🥇

    The golden boy of Indian athletics wins the men’s javelin throw at the World Athletics Championships in Budapest. 🥇

    With this, Neeraj Chopra becomes 1st 🇮🇳 athlete to win a gold medal at the… pic.twitter.com/WLmjAXwyFy

    — Anurag Thakur (@ianuragthakur) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: World Athletics Championship: 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5வது இடம்! தேசிய சாதனை படைத்த வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.