சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டி இன்று (ஜூலை 16) நடைபெற்றது.
இதில், இந்தியாவைச் சேர்ந்தவரும், உலகின் 2ஆம் நிலை வீராங்கனையுமான பி.வி. சிந்து, ஜப்பானை சேர்ந்தவரும், 38ஆம் நிலை வீராங்கனையுமான சேனா கவாகாமி உடன் மோதினார்.
ஆரம்பத்தில் இருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். 32 நிமிடங்களுக்கு நீடித்த இப்போட்டியில், சிந்து முதல் செட்டை 21-15 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-7 என்ற கணக்கிலும் வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து, சீனாவைச் சேர்ந்தவரும், 11ஆம் நிலை வீராங்கனையுமான வாங்-ஷி-யி உடன் மோத உள்ளார். இப்போட்டி நாளை (ஜூலை 17) நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் - நீளம் தாண்டுதலில் தகுதிபெற்ற முதல் ஆடவர்