சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாற்றுத் திறனாளிகளுக்காகன பாரா ஆர்ம் ரெஸ்லிங் (கை மல்யுத்தம்) சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீமந்த் ஜா, ஆடவர் 80 கிலோ பிரிவில் பங்கேற்றார். இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அவர், ஜெர்மனி வீரர் மான் ஹாய் டிரானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் சுவிட்சர்லாந்தின் இவான் சியாரோனியிடம் (Ivan sciaroni) தோல்வி அடைந்ததால், இவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இது ஸ்ரீமந்த் ஜா சர்வதேச அளவிலான பாரா ஆர்ம் ரெஸ்லிங்கில் வெல்லும் 15ஆவது பதக்கமாகும்.