ரியாத்: சவுதி அரேபியா 2034 FIFA உலக கோப்பைக்கான ஏலத்தில் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (அக்.9) உலகக்கோப்பை நிர்வாக குழுவான பிஃபாவிடம் உலக கோப்பை நடத்துவதற்கான விருப்ப கடிதத்தை சவுதி அரேபியா கால்பந்து கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.
2034 FIFA உலகக் கோப்பையை நடத்துவதற்கான முதல் அறிவிப்பை கடந்த வாரம் புதன்கிழமை சவுதி அரேபியா அறிவித்தது. மேலும், சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் யாசர் அல் மிசெஹால் அந்த கடிதத்தில் கையழுத்திட்டார். அதன் மூலம் பிஃபா நீர்ணயித்த ஏல செயல்பாட்டு முறையில் இறங்குவதை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியது.
2034 FIFA உலகக் கோப்பைக்கு ஏலம் எடுப்பது பற்றிய சவுதி அரேபியாவின் எண்ணம் வரலாற்று சிறப்புமிக்கது. இது புதிய கால்பந்து வாய்ப்புகளை கொடுக்கும் நாட்டின் நோக்கங்களையும், உலகளாவிய விளையாட்டுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்குறது என சவுதி அரேபியா கால்பந்து கூட்டமைப்பு கூறியது.
கடந்த 2022ஆம் FIFA உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 1986ஆம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா FIFA உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அறிக்கையின்படி அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதி போட்டியை சுமார் 32 மில்லியன் பார்வையாளர்கள் ஜியோசினிமாவில் பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: IND VS AUS: மறக்குமா நெஞ்சம்.. கோலி, கே.எல்.ராகுல் ஆடிய வரலாற்று இன்னிங்ஸ்!