சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதன்மையானவர். இவர் அண்மையில், லேவர் கோப்பை 2022க்குப் பிறகு டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார்.
இதன்படி லேவர் கோப்பை 2022 லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஐரோப்பிய அணியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோர் விளையாடுகின்றனர். இந்நிலையில் நேற்று (செப் 23) மாலை 5 மணிக்கு ஐரோப்பிய அணியின் ரோஜர் பெடரர் - ரபேல் நடால் இணை, அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக்சாக் உடன் மோதினர்.
பெடரரின் இறுதி ஆட்டம் என்பதால் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு கட்டுக்கடங்காமல் இருந்தது. இவ்வாறு விறுவிறுபாக நடைபெற்ற போட்டியின் முடிவில், 6-4, 6-7, 9-11 என்ற செட் கணக்கில் பெடரர்-ரபேல் இணை தோல்வியைத் தழுவியது.
இதனால் மைதானத்திலேயே கண்ணீருடன் விடை பெற்றார், ரோஜர் பெடரர். இந்த நிகழ்வு உலகளாவிய பெடரரின் ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதையும் படிங்க: சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ்; செக்குடியரசு வீராங்கனை ஒற்றையர் பிரிவில் சாம்பியன்