கரோனா வைரசால் உள்ளூர் விளையாட்டுகள் முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் வரை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச வாலிபால் சம்மேளனம் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ''2019-20ஆம் ஆண்டு சீசனுக்கான வாலிபால் போட்டிகளுக்கான காலண்டர் புதுப்பிக்கப்பட்டு சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டும் உள்ளது. அக்டோபர் மாதம் வரை எவ்வித நட்சத்திர பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படாது.
பீச் வாலிபால் போட்டிகளில் வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி சம்மேளனம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் சில நாள்களில் 2020-21ஆம் ஆண்டுக்கான சீசன் காலண்டர் வெளியிடப்படும். அதனைப் பற்றி பங்குதாரர்களுக்கும் அறிவிக்கப்படும். அக்டோபர் மாதத்திற்கு பின்னரே பீச் வாலிபால் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.