இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரராக வலம் வருபவர் நீரஜ் சோப்ரா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பல்வேறு போட்டிகளிலிருந்து விலகிய நீரஜ், தற்போது காயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் ஈட்டி எறிதல் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இன்று நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற நீரஜ், 87.86 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து, இந்தாண்டிற்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தனது இடத்தை நிரப்பியுள்ளார்.
-
🚨Neeraj Chopra qualified for #tokyo2020 🚨@Neeraj_chopra1 qualified for Tokyo 2020 Olympics with a throw of 87.86m in southafrica 🇿🇦 today.
— INDIAN ATHLETES (@indian_athletes) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations @Neeraj_chopra1👏👏👏 #ProudMoment #javelinthrow pic.twitter.com/AJaiD8oG5x
">🚨Neeraj Chopra qualified for #tokyo2020 🚨@Neeraj_chopra1 qualified for Tokyo 2020 Olympics with a throw of 87.86m in southafrica 🇿🇦 today.
— INDIAN ATHLETES (@indian_athletes) January 28, 2020
Congratulations @Neeraj_chopra1👏👏👏 #ProudMoment #javelinthrow pic.twitter.com/AJaiD8oG5x🚨Neeraj Chopra qualified for #tokyo2020 🚨@Neeraj_chopra1 qualified for Tokyo 2020 Olympics with a throw of 87.86m in southafrica 🇿🇦 today.
— INDIAN ATHLETES (@indian_athletes) January 28, 2020
Congratulations @Neeraj_chopra1👏👏👏 #ProudMoment #javelinthrow pic.twitter.com/AJaiD8oG5x
இதன் மூலம் நீரஜ் சோப்ரா தனது முதல் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுகுறித்து இந்திய தடகள சம்மேளனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பாக்கத்திலும் நீரஜ் சோப்ரா தகுதிப்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் முகுருசா, ஹெலப்!