தோஹா: பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. லீக், கால் இறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் கிளைமாக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
3-வது இடத்திற்கான போட்டியில் ஆப்பிரிக்க நாடான மொராக்கோ, குரேஷியா அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப் போட்டி கனவுடன் அரையிறுதியில் களமிறங்கிய மொராக்கோ அணிக்கு 2-க்கு 0 என்ற கோல் கனக்கில் பிரான்ஸ் அணி அதிர்ச்சி அளித்தது.
3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்தும் பட்சத்தில் ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சாராமல் பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்தை பிடிக்கும் முதல் ஆப்பிரிக்க மற்றும் அரபு அணி என வரலாற்று சிறப்பை மொராக்கோ பெறும்.
அதேநேரம் மற்றொரு அரையிறுதியில் அர்ஜெண்டினா அணியிடம் கண்ட தோல்வியை இந்த ஆட்டத்தின் மூலம் சரிகட்ட குரேஷியா அணியும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க: ”அர்ஜென்டினாவுடன் மோதும் இறுதிப்போட்டி கடினமானதாக இருக்கும்” பிரான்ஸ் கேப்டன் லோரிஸ்