ஜிம்னாஸ்டிக் வீரர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ட்ராம்ப்போலைன் உலகக்கோப்பை நடத்தப்படுகிறது. ட்ராம்ப்போலைன் எனப்படும் ஸ்பிரிங்கில் குதித்தாறு ஜிம்னாஸ்டிக் வீரர்கள் தங்களது சாகசங்களைச் செய்து காட்டுவார்கள். அவர்கள் செய்யும் சாகசங்களுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படும். இந்நிலையில், ஸ்பெயினின் வல்லாடோலிட் (Valladolid) நகரில் ட்ராம்ப்போலைன் உலகக்கோப்பை நடைபெற்றது.
இதில், ஆடவர் தனிநபர் பிரிவில் பெலாரஸ் வீரர் ஹன்சாரோவ் உலாட்ஸிஸ்லாவ் (HANCHAROU Uladzislau) 61.445 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தபடியாக, சீன வீரர் காவ் லெய் (Gao Lei) 61.380 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ரஷியாவின் யுடின் ஆண்ட்ரே (Yudin Andrey) 60. 945 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் வீரர்களுக்காக தயாராகும் பிரத்யேக இகோ பிரெண்ட்லி மெத்தைகள்!
மகளிர் பிரிவில், முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் லியு லிங்லிங் (Liu Lingling) தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். அவரையடுத்து, அதே நாட்டைச் சேர்ந்த ஸுயுங் (Xeuing) வெள்ளிப் பதக்கமும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மொரி ஹிக்காரு (Mori Hikaru) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இரட்டையர் பிரிவுகளுக்கான சிங்க்ரோ போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்பார்கள். சிங்க்ரோ எனப்பெயரில் இருப்பதை போல, அவர்கள் செய்யும் ஜிம்னாஸ்டிக்கில் 'சிங்க்' இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் புள்ளிகள் தொகுத்து வழங்கப்படும்.
இந்த ஆடவர் சிங்க்ரோ இரட்டையர் பிரிவில், ஜப்பானின் கிஷி டைகி - சகாய் இணை தங்கப் பதக்கத்தை வென்றது. அதேபோல், மகளிர் சிங்க்ரோ இரட்டையர் சுற்றில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கியுகோ - மால்கோவா இணை தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதையும் படிங்க: துள்ளிக் குதிக்கும் பொம்மைக் குதிரை - ஐரோப்பாவில் பிரபலமாகும் ஹாப்பி-ஹார்ஸ் போட்டி