ETV Bharat / sports

'சாக்கடைக் கழிவுகளினால் நோய் பரவும் அபாயம்' - அதிருப்தியை வெளிப்படுத்தும் தங்க மகன்! #ExclusiveVideo - மன்வெல்த் பளு தூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம்

வேலூர்: சாக்கடைக் கழிவுநீர் தேங்குவதால் மக்களுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்பரவும் அபாயம் உள்ளதாக காமன்வெல்த் பளு தூக்குதலில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம் வேதனைத் தெரிவித்துள்ளார்.

satheesh sivalingam
author img

By

Published : Sep 30, 2019, 5:52 PM IST

Updated : Sep 30, 2019, 6:02 PM IST

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்று உலகளவில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர் சதீஷ் சிவலிங்கம். இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில் சதீஷ் சிவலிங்கம், தான் குடியிருக்கும் பகுதியில் சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடமும் மற்றும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், அவர் குடியிருக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையோரம் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. மேலும் காலியாக உள்ள இடங்களில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதாகவும், குறிப்பாக மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசு உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சதீஷ் சிவலிங்கம் தனது வீடு அருகிலேயே உடற்பயிற்சி மையம் அமைத்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். எனவே, தான் மட்டுமல்லாமல் தன்னை நம்பி வரும் இளைஞர்களும் சுகாதாரச் சீர்கேடு மூலமாக பாதிக்கப்படுவதாக வேதனையுடன் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இதேபோல் அரசு அதிகாரிகள் முன்வராததால் தானே களத்தில் இறங்கி சுத்தம் செய்வது போன்றும் வீடியோ பதிவை புதிதாக வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து சதீஷ் சிவலிங்கம் கூறுகையில், "சமீப காலமாக எனது சமூகவலைத்தள பக்கத்தில் இது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன். குறிப்பாக தற்போது மழை காலம் என்பதால் எனது வீடு அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு கொசு உள்ளிட்ட பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமென தூய்மை இந்தியா திட்டத்தின் செயலியில் புகார் செய்தேன். இதைபோல் வேலூரில் உள்ள அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இந்தப் பகுதியை சுத்தம் செய்து டெங்கு உள்ளிட்ட கொடிய நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

'சாக்கடைக் கழிவுகளினால் டெங்கு பரவும் அபாயம்' - சதீஷ் சிவலிங்கம்

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமையை பறை சாற்றிய தங்க மகன் சதீஷ் சிவலிங்கம் சுகாதாரச் சீர்கேடு குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட இந்த சம்பவம் மத்திய, மாநில அரசுகள் மீது அவர் வைத்துள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க:

’உங்க வீட்டு பிரச்னைய முதல்ல முடிங்கப்பா’ - பாக். வீரர்களுக்கு தவான் பதிலடி!

Intro:வேலூர் மாவட்டம்

சாக்கடை கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை - வேலூர் தங்க மகன் சதீஷ் சிவலிங்கம்Body:காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்று உலகளவில் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சதீஷ் சிவலிங்கம். இவர் தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் இந்த நிலையில் சதீஷ் சிவலிங்கம் தனது வீடு அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது எனவும் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மற்றும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார் அதாவது இவரது வீடு அமைந்துள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையோரம் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது இதுபோல் வீட்டிற்க்கு எதிர்புறம் காலியாக உள்ள இடங்களில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது குறிப்பாக மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது சதீஷ் சிவலிங்கம் தனது வீடு அருகிலேயே உடற்பயிற்சி மையம் அமைத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். எனவே, தான் மட்டுமல்லாமல் தன்னை நம்பி வரும் இளைஞர்களும் சுகாதார சீர்கேடு மூலமாக பாதிக்கப்படுவதாக வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் இதேபோல் அரசு அதிகாரிகள் முன்வராததால் தானே களத்தில் இறங்கி சுத்தம் செய்வது போன்றும் வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார் இருப்பினும் இதுவரை அந்த பகுதியில் அரசு தரப்பில் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் தொடர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து சதீஷ் சிவலிங்கம் கூறுகையில், சமீப காலமாக எனது சமூகவலைத்தள பக்கத்தில் இது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன் குறிப்பாக தற்போது வேலூரில் மழை காலம் என்பதால் எனது வீடு அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது இதனால் டெங்கு கொசு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது எனவே முன்னெச்சரிக்கையாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தூய்மை இந்தியா திட்டத்தின் செயலியில் புகார் செய்தேன் இதைபோல் வேலூரில் உள்ள அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன் ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இந்த பகுதியை சுத்தம் செய்து டெங்கு உள்ளிட்ட கொடிய நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்வரவேண்டும்" என்று தெரிவித்தார் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று உலக அளவில் தமிழகத்தின் பெருமையை பறை சாற்றிய தங்க மகன் சதீஷ் சிவலிங்கம் சுகாதார சீர்கேடு குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இந்த சம்பவம் மத்திய மாநில அரசுகள் மீது அவர் வைத்துள்ள அதிருப்தியை காட்டுவது குறிப்பிடத்தக்கதுConclusion:
Last Updated : Sep 30, 2019, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.