ETV Bharat / sports

மேரிகோம் உடனான மோதல் குறித்து நிகாத் ஜரீன் பேட்டி!

ஹைதராபாத்: தனது குத்துச்சண்டை பயணம் குறித்தும்,  மேரிகோம் குறித்தும் நிகாத் ஜரீன் நமது ஈடிவி பாரதத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

Nikith Zareen
Nikith Zareen
author img

By

Published : Jun 3, 2020, 3:24 AM IST

ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட தீவிரம் காட்டினார்.

இதனால், அவர் 51 கிலோ எடைப் பிரிவுக்கான தேர்வுப் போட்டியில் தனக்கும், மேரி கோமிற்கும் போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையானது.

நிகாத் ஜரீனின் அழைப்பை ஏற்க முதலில் மேரி ‌கோம் மறுத்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் நிகாத் ஜரீன் - மேரி கோம் இடையே தேர்வு போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இதில் மேரி கோம், 9-1 என்ற புள்ளிக் கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி, ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் தனது குத்துச்சண்டை பயணம் குறித்தும், மேரிகோம் குறித்தும் நிகாத் ஜரீன் நமது ஈடிவி பாரதத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் இதோ.

கேள்வி: உங்களுக்கும் மேரி கோமிற்க்கும் கடந்த சில மாதங்களாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து முரண் இருந்து வந்தது. தற்போது அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். அது குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: எனக்கு அவர் மீது எவ்வித கோபமும் இல்லை. மேரி கோம் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கேள்வி: தடகள வீராங்கனையாக இருந்து நீங்கள் திடீரென குத்துச்சண்டை வீராங்கனையாக மாறியது எப்படி?

பதில்: எனது பயணத்தை முதலில் தடகள வீராங்கனையாகதான் நான் தொடங்கினேன். 100, 200 மீட்டர் போட்டிகளில் தான் பங்கேற்று வந்தேன். ஒருமுறை நிஸாம்பாத்தில் நடந்த சம்பவம் ஒன்று எனது விளையாட்டுப் பயணத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியது.

எனது தந்தையுடன் நிஸாம்பாத்திலுள்ள மைதானத்தில் ஓட்டப்பந்தய போட்டிக்கு பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றிருந்தேன். அப்போது குத்துச் சண்டையில் முழுக்க முழுக்க ஆடவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் மகளிர்களில் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே குத்துச்சண்டையில் பங்கேற்றதை கவனித்தேன்.

எனவே, வீராங்கனைகள் ஏன் அதிகமாக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பது இல்லை என்ற கேள்வியை எனது தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் குத்துச்சண்டை விளையாடுவதற்கான வலிமை அவர்களிடம் மட்டுமே உள்ளது, பெண்களிடம் இல்லை என்றார்.

ஒரு பெண்ணாக அவர் கூறியதை சவாலாக எடுத்துக் கொண்டு குத்துச்சண்டை போட்டியில் விளையாட முடிவு செய்தேன். அதன் பலனாக 2009இல் குத்துச்சண்டை போட்டியில் நான் அறிமுகமானேன். அங்கு தான் தொடங்கியது எனது குத்துச்சண்டை பயணம்.

கேள்வி: இந்த லாக் டவுனை நீங்கள் எப்படி கழிக்கிறீர்கள்?

பதில்: லாக்டவுனால் நான் நீண்ட நாட்களுக்கு பிறகு எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறேன். குறிப்பாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இப்போதுதான் எனது குடும்பத்தினருடன் ரமலான் பண்டிகையை கொண்டாடினேன். இது மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டிலேயே முடங்கியிருப்பதால் எனது ஃபிட்னஸில் நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.

கேள்வி: உங்களது அடுத்த கட்ட லட்சியம் என்ன?

பதில்: கரோனாவால் இந்த ஆண்டு குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுவது கடினம். அதனால் அடுத்த ஆண்டு மற்றும் 2022-ல் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் எனது ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு பதிலளித்து புன்னகையுடன் பேட்டியை நிறைவு செய்தார் நிகாத் ஜரீன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.