ETV Bharat / sports

தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்! - தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம்\

திண்டுக்கல்: தங்கல் படத்தில் தனது தந்தையின் கனவை நிறைவேற்ற சாம்பியன் பட்டம் வென்ற மகளைப் போல, நிஜ வாழ்க்கையில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றி தமிழ்நாட்டை சேர்ந்த கலைவாணி சாதனை படைத்துள்ளார்.

kalaivani
kalaivani
author img

By

Published : Dec 15, 2019, 9:15 PM IST

இந்த மாதம் நோபள நாட்டில் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தமாக 312 பதங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தது.

இத்தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த காலைவாணி என்பவர் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். சென்னை மாவட்டத்தில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த கலைவாணி குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெல்வதற்கு காரணம் அவரது தந்தைதான் என தெரிவித்துள்ளார்.

kalaivani
தமிழ்நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை கலைவாணி

இதுகுறித்து கலைவாணி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், குடும்பச் சூழலின் காரணமாக எனது தந்தையின் கனவு தகர்ந்தாலும் என்னையும் எனது அண்ணனையும் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தார். அப்படி எதிர்பாராதவிதமாக ஒருமுறை எனது அண்ணன் கலந்துகொண்ட போட்டியில் நானும் விளையாட்டாக கலந்துகொள்ள அதுவே எனது வாழ்க்கை என்று உணர்ந்தேன். அதிலிருந்து தொடர்ந்து முறையாக பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.

முதலில் நான் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொள்வதை அறிந்த எனது உறவினர்கள், எதற்காக இதெல்லாம்... வேறு ஏதாவது ஒரு விளையாட்டை தேர்வு செய்யலாமே. இதெல்லாம் பெண்களுக்கு சரிப்படாது என என்னிடமும் என் தந்தையிடம் கூறினர். ஆனால் என் தந்தை அது எதையும் பொருட்படுத்தாமல் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தார்.

kalaivani
தெற்காசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற கலைவாணி

எனது தந்தை விவசாயி என்பதால் பெரிய அளவிலான வருமானம் இல்லாத போதும் எங்களது வளர்ச்சிக்காக அவர் நிறைய பாடுபட்டார். அதேபோல அவரது கனவை நினைவாக்க நாங்களும் நன்றாக விளையாடினோம். இது எனது முதல் சர்வதேச போட்டியில் கிடைத்த தங்கப்பதக்கம். அடுத்த கட்டமாக 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று கூறினார்.

தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்

தங்கல் படத்தில் தனது தந்தையின் கனவை நிறைவேற்ற சாம்பியன் பட்டம் வென்ற மகளைப் போல, நிஜ வாழ்க்கையில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றிய கலைவாணிக்கு ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்.

இதையும் படிங்க: விளையாட்டை பெண்கள் தேர்வு செய்யவேண்டும்: தங்க மங்கை கலைவாணி பேட்டி!

Intro:திண்டுக்கல் 15.12.19

தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்.

Body:பிரபல பாலிவுட் திரைப்படமான தங்கல் படத்தில் தந்தையின் கனவை நனவாக்க அவரது மகள் தங்கம் வென்று சாதனை படைப்பார். அதேபோல சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசனின் மகள் கலைவாணி நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த கலைவாணி குத்துச்சண்டை போட்டியில் தங்கம் செல்வதற்கு காரணம் அவரது தந்தைதான். ஏனெனில் ஸ்ரீனிவாசன் தனது சிறுவயதில் குத்துச்சண்டை விளையாட ஆசைப்பட்டார். ஆனால் அவரது குடும்ப சூழல் காரணமாக குத்துச்சண்டை வீரராகும் ஆசை நிராசையானது. இருப்பினும் தன்னுடைய கனவை தன் குழந்தைகளின் வெற்றியிலாவது காண வேண்டும் என்ற நோக்கில் தனது இரண்டு குழந்தைகளையும் குத்துச்சண்டை வீரராக செய்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய கலைவாணி, குடும்பச் சூழலின் காரணமாக எனது தந்தையின் கனவு தகர்ந்தாலும் என்னையும் எனது அண்ணனையும் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தார். அப்படி எதிர்பாராதவிதமாக ஒரு முறை எனது அண்ணன் கலந்துகொண்ட போட்டியில் நானும் விளையாட்டாக கலந்துகொள்ள அதுவே எனது வாழ்க்கை என்று உணர்ந்தேன். அதிலிருந்து தொடர்ந்து முறையாக பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.

முதலில் நான் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொள்வதை அறிந்த எனது உறவினர்கள் எதற்காக இதெல்லாம் வேறு ஏதாவது ஒரு விளையாட்டை தேர்வு செய்யலாமே. இதெல்லாம் பெண்களுக்கு சரிப்படாது என என்னிடமும் என் தந்தையிடம் கூறினார். ஆனால் என் தந்தை அது எதையும் பொருட்படுத்தாமல் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தார்.

எனது தந்தை விவசாயி என்பதால் பெரிய அளவிலான வருமானம் இல்லாத போதும் எங்களது வளர்ச்சிக்காக அவர் நிறைய பாடுபட்டார். அதேபோல அவரது கனவை நினைவாக்க நாங்களும் நன்றாக விளையாடினோம். இது எனது முதல் சர்வதேச போட்டியில் கிடைத்த தங்கப்பதக்கம். அடுத்த கட்டமாக 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.