ETV Bharat / sports

விளையாட்டை பெண்கள் தேர்வு செய்யவேண்டும்: தங்க மங்கை கலைவாணி பேட்டி!

சென்னை: தமிழ்நாடு பெண்கள், விளையாட்டை தங்களது எதிர்காலமாகத் தேர்வு செய்தால் உடலுக்கும், மனதிற்கும், சமூகத்திற்கும் நல்லது என 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கலைவாணி கூறியுள்ளார்.

author img

By

Published : Dec 12, 2019, 2:56 PM IST

boxing-gold-medalist-kalaivani-pressmeet-in-chennai-airport

நேபாளத்தில் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை கலைவாணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

தங்க மங்கை கலைவாணி

நேபாளத்தில் தங்க பதக்கத்தை வென்று சென்னை திரும்பிய வீராங்கனை கலைவாணிக்கு விமான நிலையத்தில் குடும்பத்தினர், நாண்பர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கலைவாணி பேசுகையில், பாகிஸ்தான், பூட்டான் நாட்டு வீராங்கனைகளுடன் போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு வந்தேன். நேபாள் நாட்டு வீராங்கனையை வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளேன். தங்கப்பதக்கத்தை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இருந்து 10 ஆண்களும் 6 பெண்களும் பங்கேற்றோம். தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டுமே கலந்துகொண்டேன்.

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உதவி செய்தால் குடும்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பிர்சனைகளிலிருந்து எளிதாக வெளிவர முடியும். பொருளாதாரம் இல்லை என்பதால் தான் நிறைய திறமைசாலிகள் வளராமல் உள்நாட்டிலேயே சாமானியனாக சுற்றிவருகிறோம். எனக்கு உதவி செய்வதாக கூறியிருக்கிறார்கள். இனிமேல் தான் அதுகுறித்து கேட்கவேண்டும்.

தங்க மங்கை கலைவாணி பேட்டி

குத்துச் சண்டை என்பது சுய பாதுகாப்பு கலை தான். பெண்கள் தற்காப்புக்காக கற்றுக் கொள்ளவேண்டும். யாராவது பிரச்னை செய்தால் குத்து சண்டை முலமாக எதிர்கொள்ள கூடிய தைரியம் கிடைக்கும். 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது என்னுடைய இலக்கு.

இந்த தலைமுறை பெண்கள் சுதந்திரமாக வெளியே வருகின்றனர். பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தினால் உடலுக்கும், மனதிற்கும்,சமூகத்திற்கும் நல்லது எனக் கூறினார்.

இதையும் படிங்க: தெற்காசிய விளையாட்டுப்போட்டி: தங்கப் பதக்கத்தை வென்ற மற்றொரு தமிழ் மகள்!

Intro:பெண்கள் விளையாட்டுகளை தேர்வு செய்வது நல்லது தங்க பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பேட்டிBody:பெண்கள் விளையாட்டுகளை தேர்வு செய்வது நல்லது தங்க பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பேட்டி

தெற்காசிய 13வது விளையாட்டு போட்டிகள் நேபாள் நாட்டில் நடந்தது. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தமிழக வீராங்கனை கலைவாணி கலந்துகொண்டு தங்க பதக்கத்தை வென்றார். தங்க பதக்கத்தை வென்று சென்னை திரும்பிய வீராங்கனை கலைவாணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கலைவாணி செய்தியாளர்களுக்கு பேட்டி;

பாகிஸ்தான், பூட்டான் நாட்டு வீராங்கனைகளுடன் போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு வந்தேன். நேபாள் நாட்டு வீராங்கனையை வெற்றி பெற்று தங்க பதக்கத்தை பெற்றேன். தங்க பதக்கத்தை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இருந்து 10 ஆண்களும் 6 பெண்களும் பங்கேற்றோம். தமிழகத்தில் இருந்து நான் மட்டும் கலந்துக் கொண்டேன்.

குத்து சண்டை சுய பாதுகாப்பு கலை தான். யாராவது பிரச்சனை செய்ததால் குத்து சண்டை முலமாக எளிதாக எதிர்கொள்ள கூடிய தைரியம் இருக்கும்.

விளையாட்டு வீரர்களுக்கு உதவிகள் செய்தால் ஊக்கமாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் உதவி செய்வதாக கூறியுள்ளன.

20-20 ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் பெற வேண்டும் என்பது என்னுடைய இலக்கு.

கடந்த காலங்களில் பெண்கள் வெளியே செல்லாமல் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இந்த தலைமுறை பெண்கள் சுதந்திரமாக வெளியே வருகின்றனர். பெண்கள் விளையாட்டு போட்டிகளை தேர்வு செய்தால் உடலுக்கும் நல்லது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.