உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 65 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் நடுவரின் தவறான முடிவால், கஜகஸ்தானின் தவ்லட் நியாஸ்பெகாவிடம் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மங்கோலியாவின் துல்கா ஓக்கிரை, பஜ்ரங் எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் பாதியில் 2-6 என பின்தங்கியிருந்த பஜ்ரங் புனியா, பிற்பாதியில் சிறப்பாக செயல்பட்டதால் 8-7 என்ற புள்ளிக்கணக்கில் நூலிழையில் வெற்றிபெற்றார். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது முறையாக அவர் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார்.
அதே போன்று வெண்கலத்திற்காக 57 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஈரான் வீரர் ரீசா அட்ரினாகார்ச்சியை 6-3 என வீழ்த்திய மற்றொரு இந்திய வீரர் ரவிக்குமாரும் பதக்கத்தை வென்றார். அவர் தனது முதல் உலகத் தொடரிலேயே பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார்.
-
India’s #Wrestling stars ⭐️! 🥉🤼♂️🇮🇳@BajrangPunia & #RaviKumar with their bronze medals that they won at the World C’ships.✌🏻😎
— SAIMedia (@Media_SAI) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
👉🏻While this is Bajrang’s third World medal, it’s Ravi’s first medal in his very first appearance.
Wish them the best having earned #OlympicQuota(s). pic.twitter.com/6yv8mQsl2H
">India’s #Wrestling stars ⭐️! 🥉🤼♂️🇮🇳@BajrangPunia & #RaviKumar with their bronze medals that they won at the World C’ships.✌🏻😎
— SAIMedia (@Media_SAI) September 20, 2019
👉🏻While this is Bajrang’s third World medal, it’s Ravi’s first medal in his very first appearance.
Wish them the best having earned #OlympicQuota(s). pic.twitter.com/6yv8mQsl2HIndia’s #Wrestling stars ⭐️! 🥉🤼♂️🇮🇳@BajrangPunia & #RaviKumar with their bronze medals that they won at the World C’ships.✌🏻😎
— SAIMedia (@Media_SAI) September 20, 2019
👉🏻While this is Bajrang’s third World medal, it’s Ravi’s first medal in his very first appearance.
Wish them the best having earned #OlympicQuota(s). pic.twitter.com/6yv8mQsl2H
பஜ்ரங் புனியா, ரவிக்குமார் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாகவே தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: #WBC2019: முதல்முறையாக பாக்ஸிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியர்..!