தலைநகர் டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் 53 கிலோ ஃப்ரீ ஸ்டைல் எடைப்பிரிவுக்கான முதல் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் மயு முகைடாவுடன் தோல்வியடைந்தார்.
இருப்பினும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் வியட்நாமைச் சேர்ந்த தி லி க்யூவுடன் (Thi Ly Kieu) மோதினார்.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வினேஷ் போகத் 10-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
அதேபோல, நடைபெற்ற மகளிர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவுக்கான வெண்கலப் பதக்க போட்டியில் இந்திய வீராங்கனை அன்சூ மாலிக் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் செவேரா இஷ்முரடோவாவை (Sevara Eshmuratova) வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
அதேசமயம், இந்த தொடரில் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் முன்னேறி குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
முன்னதாக, இந்த தொடரில் இந்திய வீராங்கனைகளான திவ்யா கக்ரன் (65 கி.கி), பிங்கி (55 கி.கி), சரிதா மோர் (59 கி.கி) ஆகியோர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மல்யுத்தம்: 27 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்