ETV Bharat / sports

Asian Games: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்றார்! - பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் அணி

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெங்கலப் பதக்கம் வென்றார்.

ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்றார்
ரமிதா ஜிண்டால் வெண்கலம் வென்றார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 4:50 PM IST

ஹாங்சோ (சீனா): ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியானது துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் ஷாட் கன் ஆகிய மூன்று பிரிவுகளில் தனிநபர், குழு மற்றும் கலப்பு குழு ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்காக இந்தியா 33 பேர் கொண்ட துப்பாக்கிச் சுடும் குழுவை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இன்று (செப்.24) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ரமிதா 230.1 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். கடைசி ஷாட் வரை இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிக்கான போட்டியில் இருந்தது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான மெஹுலி கோஷ் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

சீனாவின் ஹுவாங் யூடிங் 252.7 புள்ளிகளுடன் முந்தைய ஆசிய விளையாட்டு சாதனையை முறியடித்து, தங்கப் பதக்கத்தை வென்றார். சீனாவைச் சேர்ந்த ஹான் ஜியாயு 251.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ரமிதா 230.1 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தார்.

முன்னதாக, ரமிதா, ஆஷி சௌக்சே மற்றும் மெஹுலி கோஷ் அடங்கிய இந்திய பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் அணி, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் 1886.0 என்ற மொத்த மதிப்பெண்ணுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 2023-ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இது இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும். இந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் தங்கப் பதக்கத்தை சீனா கைப்பற்றியது.

இதையும் படிங்க: Ind Vs Aus 2nd ODI : மழையால் நின்ற ஆட்டம் மீண்டும் தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.